×

45 நிமிடத்தில் 8,500 முறை ஸ்கிப்பிங்: காரைக்குடி மாணவர் சாதனை

காரைக்குடி: காரைக்குடியில் பிளஸ் 2 முடித்த மாணவர் 45 நிமிடத்தில் 8,500 முறை ஸ்கிப்பிங் செய்து சாதனை செய்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீவித்யாகிரி பள்ளியில் ஸ்கிப்பிங் சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் பிளஸ் 2 முடித்த மாணவர் கபிலேஷ்வரன் 45 நிமிடங்களில் 8,500 முறை ஸ்கிப்பிங் செய்து சோழன் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். சோழன் சாதனை புத்தக நிறுவன தலைவர் நிமலன் நீலமேகம், மாணவர் கபிலேஷ்வரன் சாதனையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினார்.மாணவர் கபிலேஷ்வரன் கூறுகையில், ‘‘பிளஸ் 2 முடித்து கல்லூரி சேர காத்திருக்கிறேன். எனது தந்தை தடகள வீரர். என்னை தடகள வீரராக்க வேண்டும் என்பது அவர் ஆசை. எனக்கும் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உள்ளது. செஸ் போட்டியில் மாநில அளவில் விருது பெற்றுள்ளேன். 8ம் வகுப்பு படிக்கும் போது இருந்து ஸ்கிப்பிங் குதித்து வருகிறேன். இதில் ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முயற்சியை துவங்கினேன். ஒரு நிமிடத்தில் 182 முதல் 200 முறை குதிப்பேன். தற்போது 45 நிமிடத்தில் 8,500 முறை குதித்து சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன்’’ என்றார்….

The post 45 நிமிடத்தில் 8,500 முறை ஸ்கிப்பிங்: காரைக்குடி மாணவர் சாதனை appeared first on Dinakaran.

Tags : Karaicudi ,Karaigudi ,Sivagangai ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...