×

தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல்

தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது: ‘வேளாண்மை-உழவர் நலத் துறை’ என்று பெயர் மாற்றம் செய்து வேளாண் பெருமக்களையெல்லாம் பெருமிதம் கொள்ள வைத்த முதல்வருக்கும், தமிழகத்தின் முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையை பணிவுடன் அளித்து என் பணியைத் தொடர்கிறேன். இந்த முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும் வாய்ப்பை எனக்கு அளித்துத் தமிழக சட்டமன்ற வரலாற்றின் நூற்றாண்டில் என்னையும் பெருமைப்படுத்திய உங்களுக்கு என் நன்றி மலர்களை அர்ப்பணிக்கிறேன். மக்களாட்சி மாண்புக்கு விரோதமாக, தனித்து முடிவெடுத்து அறிவித்து செயல்படுத்தும் போக்கைக் கடைப்பிடிக்காத மகத்துவம் கொண்டது  இந்த அரசு என்பதை அனைவரும் அறிவர். துறையின் அமைச்சர் என்கின்ற மாபெரும் பொறுப்பைத் தோள்களில் தாங்கியிருக்கிற நான், அரசு அலுவலர்களுடன் 18 மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களை, தஞ்சாவூர், திருச்சி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் கேட்டறிந்தேன். உலகளாவிய வேளாண் வல்லுநர்களின் கருத்துக்கள் காணொலிக் காட்சி மூலம் கேட்டறியப்பட்டன. மேலும், எனது தலைமையில் வேளாண் ஏற்றுமதியாளர்கள், வேளாண் வணிகர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், நிதி -மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சருடன் இணைந்து அனைத்துத்தரப்பு விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் ஆகியோரின் கருத்துக்களும் கேட்டறியப்பட்டன.தொடர்ந்து, விவசாயிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் சென்னையில் கூட்டம் நடத்தி, கருத்துக்கள் கேட்டறியப்பட்டன. இக்கூட்டங்களில் கலந்து கொள்ள இயலாத விவசாயிகள் தங்கள் கருத்துக்களை “உழவன் செயலி” வாயிலாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் தெரிவித்தனர். மேலும், தலைமைச்செயலர் உழவர்நலன் தொடர்புடைய அனைத்துத் துறைத் தலைவர்களுடனும் கலந்து ஆலோசித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து, அதனடிப்படையில், தமிழக வரலாற்றில் முதல்முறையாக 2021-2022ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.* இயற்கை விவசாயிகளுக்கு சான்றிதழ்தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கூறியிருப்பதாவது:இயற்கை வேளாண்மை தொடர்பான பணிகளை சிறப்புக்கவனத்துடன் செயல்படுத்துவதற்கு, முதல்வர்”வேளாண்மைத் துறையில் இயற்கை வேளாண்மைக்கென்று தனிப் பிரிவு” ஒன்று உருவாக்கப்படும், இயற்கை வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம் வழங்கப்பட்டு ஊக்கப்படுத்தப்படும்” என்று அறிவித்ததற்கிணங்க, ‘‘இயற்கை வேளாண்மை வளர்ச்சித் திட்டம்” என்ற உன்னதத் திட்டம் நடப்பு 2021-22ம் ஆண்டு செயல்படுத்தப்படும். இயற்கை எருவைப் பயன்படுத்தும் உழவர்களுடைய கைபேசி எண்களின் மூலம் இயற்கை விவசாயிகளின் பட்டியல் வட்டாரந்தோறும் தயாரிக்கப்படும். அவர்களுக்கு இயற்கை விவசாயிகள் என்கிற சான்றிதழ்கள் வழங்கப்படும். இதைச் செயல்படுத்த, விவசாயிகளுக்கிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அங்கக சான்றளிப்பு குறித்த பயிற்சியும் வழங்கப்படும். இத்திட்டம் 33 கோடியே 3 இலட்சம் ரூபாய் செலவில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்….

The post தமிழக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு தனி பட்ஜெட்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,M. R.R. K.K. Pannier ,Minister of Agriculture and ,Farmers Welfare Department Budget ,Government of Tamil Nadu ,R.R. K.K. Bannir Wealthy ,M. R.R. K.K. Bunneer ,
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...