×

மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கோவை: மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தை சேர்ந்தவர் ஜஸ்டிஸ். இவரது மனைவி வள்ளிமணி (28). நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இவர்கள் ஊசி, பாசி வியாபாரம் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் வியாபாரம் பாதிக்கப்பட்டதால் ஊராட்சி தலைவரிடம், ‘‘எங்களுக்கு ரேஷன் கார்டு இல்லை. இதனால் அரசு வழங்கும் நிவாரண உதவி கிடைப்பதில்லை. நிவாரண பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர். முக சார்பில் இவர்களுக்கு அரிசி, பருப்பு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.இந்நிலையில் வள்ளிமணி, நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உடலில் மண்எண்ணெய் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். ‘‘பஞ்சாயத்து தலைவர் என்னையும், கணவரையும் மிரட்டியதால், உயிருக்கு பயந்து எனது கணவர் எங்கோ மாயமாகி விட்டார். அவரை கண்டுபிடித்து தர வேண்டும். மிரட்டல் விடுத்த பஞ்சாயத்து தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறினார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது….

The post மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Tharakori ,Coimbatore ,Pollachi Kullakkapalayam ,Dinakaran ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...