×

ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.13.50 கோடியில் மரக்கன்று நடும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம்: ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ₹13.50 கோடியில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர்  தங்கம் தென்னரசு தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் பசுமை பொலிவை ஏற்படுத்தவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்பூங்காக்கள் விளங்கிட ரூ.13.50 கோடி மதிப்பீட்டில் 3,04,627  மரக்கன்றுகள் நட சிப்காட் நிறுவனம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் நேற்று நடந்தது. இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு மரக்கன்று நட்டு விழாவை துவக்கி வைத்தார். பின்னர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் புங்கன், நாவல், நீர்மருது, இலுப்பை, மகிழம், பூவரசன், புலியன், பாதாம், மந்தாரை, ஆலம், அரசன், டவுபியா, மயில், சொர்கம், ஸ்பேத், நெல்லி, ஈட்டி, ஏழிலை, வேம்பு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டது.அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, ”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 100 நாள் ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கொரோனா தொற்றை வெற்றிகரமாக சமாளித்து பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் கையாண்டுள்ளார். பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிபடி சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றி தமிழக அரசு வெற்றிநடை போடுகிறது.  100வது நாளை நினைவுகூறும் வகையில் “தலைநிமிரும் தமிழகம் பேரு சொல்லும் 100 நாட்கள்” என்ற தலைப்பில்  தொழிற்துறை சார்பில் 3,04,627 மரக்கன்றுகளை 500 ஏக்கரில் நடும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக  ஒரகடம் சிப்காட் வளாகத்தில் 62 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.  நிகழ்ச்சியில், தொழிற்துறை முதன்மைச்செயலர் முருகானந்தம், சிப்காட் நிறுவன மேலாண் இயக்குநர் ஆனந்த், காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி, எம்எல்ஏக்கள் செல்வபெருந்தகை, எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்….

The post ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.13.50 கோடியில் மரக்கன்று நடும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Oragadam Chipcot Industrial Park ,Kanchipuram ,Minister ,Thangam ,Southern government ,Oragadam Chipkot Industrial Park ,Tamil Nadu… ,Oragadam Chipkot ,Industrial Park ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...