×

ஊரடங்கால் பணி முடியாத கட்டிடங்களுக்கு அனுமதியை நீட்டிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சூளைமேட்டை சேர்ந்த ஸ்டெப்ஸ்டோன் புரமோட்டர்ஸ் நிறுவனம் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் மோதிஸ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவள்ளூர் மாவட்டம் பெரியகுப்பம் கிராமத்தில் 1098.70 சதுர மீட்டரில் குடியிருப்பு கட்டுவதற்கு கடந்த 2018ல் கட்டிட அனுமதி பெற்றோம். இந்த கட்டிட அனுமதிக்கான கால அவகாசம் 3 ஆண்டுகளாகும். ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக கட்டிட தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றதால் கட்டிடப் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியவில்லை. ஒன்றிய அரசு அறிவுறுத்தலின்படி ரியல் எஸ்டேட் துறையில் கட்டிட பணிகளுக்கான அனுமதிக்கான கால அவகாசத்தை நீட்டித்து தரும்படி கூறப்பட்டுள்ளது.கொரோனா தாக்கத்தால் முடிவடையாமல் உள்ள கட்டுமான பணிகளை முடிக்க அவகாசம் கோரி திருவள்ளூர் நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தோம். எங்கள் மனு பரிசீலிக்கப்படவில்லை. எனவே, எங்களது மனுவை பரிசீலித்து கட்டிட அனுமதிக்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு உத்தரவிட வேண்டும், என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஞானபானு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து கட்டிட அனுமதிக்கான கால அவகாசத்தை 9 மாதங்கள் நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்….

The post ஊரடங்கால் பணி முடியாத கட்டிடங்களுக்கு அனுமதியை நீட்டிக்க வேண்டும்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : . Chennai ,Chennai High Court ,Stepstone Promoters ,Choolaimet ,Motishkumar ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...