×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் அவரை விளைச்சல் இருக்கு…விலை இல்லை-விவசாயிகள் கவலை

வருசநாடு :  கடமலை-மயிலை ஒன்றியத்தில் அவரை விளைச்சல் அதிகமாக இருந்தும், போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கடமலைக்குண்டு, வருசநாடு, குமணன்தொழு, மூலக்கடை, முத்தாலம்பாறை, தாழையூத்து, தும்மக்குண்டு, வாலிப்பாறை ஆகிய பகுதிகளில் அவரை சாகுபடி அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு போதிய மழை கிடைத்ததால், சீசனில் அவரை விளைச்சல் அதிகமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை விவசாயிகள் ஒரு கிலோ அவரையை ரூ.30 முதல் 40 வரை சந்தையில் விற்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக மக்கள் அதிகமாக கூடும் முக்கிய சந்தைகளை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது. இதனால், கொள்முதல் செய்ய ஆளில்லாமல், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.7 முதல் 8 வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வரும் நாட்களில் படிப்படியாக விலை ஏறும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். …

The post கடமலை-மயிலை ஒன்றியத்தில் அவரை விளைச்சல் இருக்கு…விலை இல்லை-விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Mandamalay-Manila Union ,Mandamalaya-Manila Union ,Kadamalaya-Manila Union ,Dinakaran ,
× RELATED தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 22...