×

ஒரத்தநாடு அருகே அதிகாரிகள் நடவடிக்கை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் பெண் தீக்குளிக்க முயற்சி-அதிமுக மகளிரணி நிர்வாகி வீட்டை 18க்குள் காலி செய்ய உத்தரவு

ஒரத்தநாடு : ஒரத்தநாடு அருகே தோப்புநாயகம் கிராமத்தில் பொதுப்பணிதுறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதிமுக தஞ்சை மாவட்ட மகளிர் அணி துணை தலைவிக்கு ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் எனஅதிகாரிகள் உத்தரவு.மேலும் ஆக்கிரமிப்பு செய்து 3கடை கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை.தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் தோப்பு நாயகம் கிராமத்தில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றுப்பாலம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக வந்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், ஒரத்தநாடு டிஎஸ்பி சுனில்,தாசில்தார் சீமான் ஆகியோர் தோப்புநாயகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் மனைவி லட்சுமிஎன்பவர் நடத்தி வந்த ஓட்டல் ,ஆறுமுகம் மகன் ராசு நடத்தி வந்த சலூன் கடை மற்றும் அய்யாக்கண்ணு மகன் வேலன்நடத்தி வந்த பெட்டிக்கடை மற்றும் டீக்கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றினர். அப்போது ஓட்டல் நடத்தி வந்த லட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டினார். பின்னர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் லட்சுமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அரசு இடத்தில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் இது சம்பந்தமாக பல முறை புகார் வந்துள்ளதால் இதை அகற்றுகிறோம் என தெரிவித்தனர். மேலும் அதே வசித்து வரும் தஞ்சை மாவட்ட அதிமுக மகளிர் அணி தலைவி லத்திமா பீவி என்பவரும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார். மேலும் அதே பகுதியை சேர்ந்த வீரையன் என்பவரும் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளார். இவர்கள் குடும்பம் நடத்தி வரும் வீடு என்பதால் அதிகாரிகள் அவர்களுக்கு ஆகஸ்ட் 18ம் தேதிக்குள் வீடுகளை அகற்றிவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்….

The post ஒரத்தநாடு அருகே அதிகாரிகள் நடவடிக்கை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் பெண் தீக்குளிக்க முயற்சி-அதிமுக மகளிரணி நிர்வாகி வீட்டை 18க்குள் காலி செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Oranthanadu ,Orathanadu ,Orianagam ,Thoppurnayagam ,Oratnadu ,Odranadu ,Gycera ,Dinakaran ,
× RELATED ஒரத்தநாட்டில் தீ தொண்டு நாள், வார...