×

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு : காவல்துறைக்கு சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கைது!

சென்னை: பட்டியலின சமூகத்தினர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுனை கேரளாவில் கைது செய்துள்ளனர். மாடலிங் துறையில் இருந்த மீரா மிதுன், தானா சேர்ந்த கூட்டம், 8 தோட்டாக்கள், போதை ஏறி புத்தி மாறி என சில படங்களில் நடித்தார். இந்த நிலையில் மீரா மிதுன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், பட்டியலின மக்களை குறிப்பிட்டே மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்தார் பட்டியலின சமூகத்தினர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்; அப்படி இருப்பதால்தான் அவர்களை அனைவரும் விமர்சிக்கிறார். இத்தகைய சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒட்டுமொத்தமாக சினிமா துறையில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என இழிவுபடுத்தி பேசி இருந்தார் மீரா மிதுன். அவரது இந்த பேச்சு திரைத்துறையில் மட்டுமல்ல பொதுவாக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட பலரும் பல்வேறு காவல்நிலையங்களில் மீரா மிதுன் மீது எஸ்.சி, எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போலீசில் புகார் கொடுத்தனர். சென்னையில் வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு- சைபர் கிரைம் போலீசார் நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகம் செய்ய தூண்டுதல், ஜாதி மதம் குறித்து பேசி கலகத்தை உருவாக்குதல் என ஜாமீனில் வெளிவர முடியாத 7 பிரிவுகளில் மீரா மிதுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் மீரா மிதுன் நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு -சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பினர்.ஆனால் அந்த சம்மன்படி மீரா மிதுன் விசாரணைக்கு ஆஜராகவில்லை.அவரது தரப்பில் இருந்தும் எந்தவித விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து அவர் இருக்கக் கூடிய இடம் எங்கே என்று செல்போன் சிக்னல் வைத்து தேடக் கூடிய பணியில் ஈடுபட்டனர். அவர் கேரளாவில் இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் கேரளா விரைந்து அவரை கைது செய்தனர். இதையடுத்து மீரா மிதுனை சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார். …

The post பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு : காவல்துறைக்கு சவால் விட்ட நடிகை மீரா மிதுன் கைது! appeared first on Dinakaran.

Tags : Meera Mithun ,Chennai ,Central ,Kerala ,
× RELATED மத்திய சென்னை தொகுதியில் திமுக...