×

மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து

மாமல்லபுரம்: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து ஒரு லாரி டைல்ஸ் கற்களை ஏற்றி கொண்டு, நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது. நேற்று அதிகாலையில் ஓஎம்ஆர் சாலை வழியாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த டிரைவர் வேலு (55) என்பவர் லாரியை ஓட்டி வந்தார். மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கம் அருகே சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரத்தில் உள்ள 2 மின் கம்பங்கள் மீது மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிஷ்டவசமாக டிரைவர் வேலு எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார். இந்த விபத்தில் 2 மின் கம்பங்கள் உடைந்து, மின் வயர்கள் அறுந்து மின் வெட்டு ஏற்பட்டது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, டிரைவரை பத்திரமாக மீட்டனர். தகவலறிந்து ஆலத்தூர் மின் ஊழியர்கள், உடனடியாக உடைந்த கம்பங்களை மாற்றி மின்வெட்டை சரி செய்தனர். புகாரின்படி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Rajahmundry ,Andhra Pradesh ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில்...