×

திண்டுக்கல் அருகே தடையில்லா சான்றுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி செயலர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்தவர் பாலகார்த்தி (44). இவர்  திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தை அணுகி புகார் அளித்தார். அதில், ‘‘நான் 24 வீட்டு மனைகளை விற்பதற்கு தடையில்லா சான்று பெற ரெட்டியார்சத்திரம் யூனியன் பலகனூத்து ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். அதற்கு அங்குள்ள செயலர் லிங்குசாமி தனக்கு ₹40 ஆயிரம் லஞ்சம் கேட்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி நேற்று மாலை பாலகார்த்தி ₹40 ஆயிரத்தை லிங்குசாமியிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லிங்குசாமியை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது….

The post திண்டுக்கல் அருகே தடையில்லா சான்றுக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் ஊராட்சி செயலர் கைது appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Dindigul ,Balakarthi ,Rediyarchatra, Dindigul district ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் அருகே புள்ளிலைன்...