×

மகளிர் தயக்கமின்றி ஓட்டுனர் உரிமம் பெற பிரத்யேக நாள்-அமைச்சரிடம் சம்பத் எம்எல்ஏ கோரிக்கை

புதுச்சேரி : புதுச்சேரி முதலியார்பேட்டை திமுக எம்எல்ஏ சம்பத், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்காவை சந்தித்து அளித்த மனு:புதுவையில் ஆண்களுக்கு நிகராக பெண் வாகனம் ஓட்டிகளும் அதிக அளவில் உள்ளனர். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் வாகன ஓட்டும் உரிமம் இல்லாமல் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் பணிக்குச் செல்லாத குடும்ப தலைவிகளாக இருக்கின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட குடும்ப வேலைகளுக்காக வாகனத்தை பயன்படுத்துகின்றனர். இவர்களில் பலருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லாததால் விபத்து  ஏற்படும்போது அவர்களுக்கு இழப்பீடு பெறுவது, வழக்கு பதிவது உள்ளிட்டவற்றில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. உரிமம் பெறாதது அவர்களின் அலட்சியம் காரணம் அல்ல, அவர்களுக்கான அசவுகரியம் காரணமாக உள்ளது.எனவே, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுனர் பழகுனர் உரிமம் மற்றும் ஓட்டுனர் உரிமம் பெற பெண்களுக்கென பிரத்யேகமான ஓட்டுனர் பழகும் உரிமம் வழங்கும் நாள் மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்கும் நாட்களை உருவாக்க வேண்டும்.  இது பெண்கள் குறிப்பாக பணிக்கு செல்லாத குடும்ப பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். குடும்ப தலைவிகள் அவர்களுக்கு என்ற பிரத்யேக நாள் உருவாக்கப்பட்டால் குழுக்களாக இணைந்து எந்த தயக்கமும் இன்றி சுதந்திரமாக ஓட்டுனர் உரிமம் பெற நல்வாய்ப்பாக அமையும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மகளிர் தயக்கமின்றி ஓட்டுனர் உரிமம் பெற பிரத்யேக நாள்-அமைச்சரிடம் சம்பத் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sampath MLA ,Minister ,Puducherry ,Mudaliarpet ,DMK ,MLA ,Sampath ,Transport Minister ,Chandra Priyanka ,Puduai ,
× RELATED புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12ம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிப்பு