×

நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மெட்வடேவ், ஆர்யனா சபலென்கா

டொரன்டோ: நேஷனல் பாங்க் ஓபன் (ரோஜர்ஸ் கோப்பை) டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு டேனில் மெட்வடேவ், ஜான் இஸ்னர், கேல் மான்ஃபில்ஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் கரோலினா பிளிஸ்கோவா, காமிலா ஜியார்ஜி ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும்,, ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் டக்வொர்த்தும் மோதினர். இதில் டேனில் மெட்வடேவ் 6-2, 6-4 என எளிதாக டக்வொர்த்தை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் பிரான்சஸ் டியாஃபோவை 6-1, 7-6 என வீழ்த்திய பிரான்ஸ் வீரர் கேல் மான்ஃபில்சும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ரஷ்ய வீரர் ஆண்ட்ரே ரப்லேவை 7-5, 7-6 என போராடி வீழ்த்தியதன் மூலம் அமெரிக்காவின் இளம் வீரர் ஜான் இஸ்னரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்க வீராங்கனை அமெண்டா அனிசிமோவாவை 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு போட்டியில் செக். குடியரசின் முன்னணி வீராங்கனையான பெட்ரா கிவிடோவாவை 6-4, 6-4 என நேர் செட்களில் வீழ்த்திய, இத்தாலி வீராங்கனை காமிலா ஜார்ஜியும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். தொடர்ந்து நடந்த மற்றொரு ஆட்டத்தில்  2ம் நிலை வீராங்கனையான கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவை 7-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்த ஜாபூர் துனிசியா. மற்றொரு போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஆர்யனா சபலென்கா, 6-1, 6-3  என்ற செட் கணக்கில் கனடாவின் ரெபேக்கா மரினோவை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்….

The post நேஷனல் பாங்க் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மெட்வடேவ், ஆர்யனா சபலென்கா appeared first on Dinakaran.

Tags : National Bank Open Tennis ,Medvedev ,Aryana Sabalenka ,Toronto ,National Bank Open ,Rogers Cup ,Daniil Medvedev ,John Isner ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் சபலென்கா மெத்வதேவ்