பந்தலூர்: தனியார் தோட்ட மின்வேலியில் சிக்கி 4 வயது ஆண் யானை பரிதாபமாக பலியானது. நீலகிரி மாவட்டம் பிதர்காடு வனச்சரகம் பந்தலூர் வட்டக்கொல்லி பகுதியில் தனியார் தோட்டத்தில் நேற்று யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு பிதர்காடு ரேஞ்சர் மனோகரன் மற்றும் வனத்துறையினர் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, தனியார் தோட்ட உரிமையாளர் சஜீ, அவரது தந்தை வர்கீஸ் ஆகியோர் விவசாய பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சோலார் மின் வேலி அமைத்து வீட்டில் இருந்து முறைகேடாக மின்சார இணைப்பு கொடுத்திருப்பதும், அந்த தோட்டத்தை கடந்து சென்ற 4 வயது ஆண் யானை மின்வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இறந்ததும் தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓங்காரம் உத்தரவின்பேரில், முதுமலை புலிகள் காப்பக மருத்துவர் ராஜேஷ் சம்பவயிடம் வந்து இறந்த யானையின் உடலை உடற்கூறாய்வு செய்தார். பின்னர் யானையின் உடல் அப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. சோலார் மின்வேலிக்கு முறைகேடாக வீட்டு மின்சார இணைப்பை பயன்படுத்தியதால் யானை பலியானது தொடர்பாக தோட்ட உரிமையாளர் சஜீ, அவரது தந்தை வர்கீஷ் ஆகியோர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகின்றனர்….
The post தனியார் தோட்ட வேலியிலிருந்து மின்சாரம் பாய்ந்து ஆண் யானை பலி appeared first on Dinakaran.