×

உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு: சுதந்திர தின விழாவில் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார்

சென்னை: தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில், உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் முதலமைச்சரால் சிறப்பாக செயல்படும் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கு, `முதலமைச்சர் விருதுகள்’ சுதந்திரதின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கப்படுகிறது.அதன்படி, தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநகராட்சிக்கு ரூ.25 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் விருது வழங்கி கவுரவிக்கப்படும். அதேபோன்று, சிறந்த நகராட்சியாக மூன்று நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதல் இடம் பிடித்த உதகமண்டலம் நகராட்சிக்கு ரூ.15 லட்சம், 2வது இடம் பிடித்த திருச்செங்கோடு நகராட்சிக்கு ரூ.10 லட்சம், 3வது இடம் பிடித்த சின்னமனூர் நகராட்சிக்கு ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது.அடுத்து, சிறந்த பேரூராட்சியாக முதல் இடத்தில் திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சியும், 2வது இடம் கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியும், 3வது சிறந்த பேரூராட்சியாக சிவகங்கை மாவட்டம் கோட்டையூர் பேரூராட்சியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பேரூராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் விருது வழங்கப்படும். சிறந்த உள்ளாட்சி அமைப்புகளாக தேர்வு செய்யப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கு வருகிற 15ம் தேதி (ஞாயிறு) சென்னை, கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றிவைத்த பிறகு ரொக்கப்பணம் மற்றும் விருதுகள் வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருது சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் தேர்வு: சுதந்திர தின விழாவில் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்குகிறார் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Independence ,BCE ,G.K. Stalin ,Chennai ,Chief Secretary of ,Tamil Nadu Government ,Shivdas Meena ,Tamil Nadu ,Independence Day ,B.C. ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்