×

காலாவதியான பொருட்களை பதுக்கி குறைந்த விலைக்கு விற்ற குடோனுக்கு சீல்

துரைப்பாக்கம்: நீலாங்கரை அறிஞர் அண்ணா நகர் பக்கிங்காம் கெனால் சாலையில் தனியாருக்கு சொந்தமான திருமண மண்டபம் உள்ளது. இங்கு, காலாவதியான அரிசி, பருப்பு போன்ற மளிகை பொருட்கள், குழந்தைகள் உண்ணக்கூடிய பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில், 6 பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று அந்த திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், காலாவதியான அரிசி, பருப்பு முதலான மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற பிஸ்கட், சாக்லேட்டுகள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். …

The post காலாவதியான பொருட்களை பதுக்கி குறைந்த விலைக்கு விற்ற குடோனுக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Duraipakam ,Neelangara Arinagar Anna Nagar Buckingham Canal Road ,Dinakaran ,
× RELATED இனிப்பில் மயக்க மருந்து கலந்து...