×

கர்நாடகா பாஜ.வில் மீண்டும் குழப்பம்; 2 புதிய அமைச்சர்கள் ராஜினாமா மிரட்டல்: சமாதானப்படுத்த பொம்மை முயற்சி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்த மாதம் 28ம் தேதி பதவியேற்றார். கடந்த 4ம் தேதி முதல் அமைச்சரவை விஸ்தரிப்பு நடந்தது. இதில் 29 பேர் புதிய அமைச்சர்களாக பதவி வகித்தனர். அவர்களுக்கு கடந்த சனிக்கிழமை துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், சில அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள துறைகள் திருப்தி அளிக்கவில்லை என்று அதிருப்தி வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஆனந்த்சிங், பி.ராமுலு, எம்டிபி நாகராஜ், சுனில்குமார் உள்பட சிலர் வெளிப்படையாக கூறி வருகிறார்கள். இதனால், கட்சி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியை மூத்த தலைவர்கள் மூலம் முதல்வர் பொம்மை மேற்கொண்டு வருவதுடன், அவர்களடன் அவரே செல்ேபானில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இருப்பினும், அதிருப்தியில் உள்ள ஆனந்த்சிங், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள அவர், தனது அமைச்சர் பதவி மட்டுமில்லாமல் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய போவதாக எச்சரித்துள்ளார். மேலும், ராஜினாமா கடிதம் கொடுப்பதற்காக சபாநாயகர் விஷ்வேஷ்வர ஹெக்டே காகேரியிடம் இன்று நேரம் ஒதுக்கி கொடுக்கும்படி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று, அமைச்சர் எம்டிபி நாகராஜ் போர்க்கொடி உயர்த்தியுள்ளதால் கர்நாடக பாஜ ஆட்சியில் உச்சகட்ட குழப்பம் நிலவுகிறது. …

The post கர்நாடகா பாஜ.வில் மீண்டும் குழப்பம்; 2 புதிய அமைச்சர்கள் ராஜினாமா மிரட்டல்: சமாதானப்படுத்த பொம்மை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Karnataka BJP ,Bengaluru ,Basavaraj Tommy ,Chief Minister of ,Karnataka ,Dinakaran ,
× RELATED பெங்களூரு மாநகரின் வெவ்வேறு பகுதிகளில் 3 பேர் கொலை: போலீசார் தீவிர விசாரணை