×

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு!: மராட்டிய அரசு அதிரடி..!!

மும்பை: மராட்டியத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனாவால் உச்சகட்ட பாதிப்பை அடைந்த மராட்டிய மாநிலம் அதிலிருந்து மீண்டு வருகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு  அம்மாநில அரசு ஏற்கனவே உதவித்தொகையை அறிவித்தது. இந்த நிலையில் கொரோனாவால் தனித்து விடப்பட்ட குழந்தைகளை 3 வகையாக பிரித்து அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சயோமதி தாக்கூர் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பெற்றோரை இழந்து வீடில்லாமல், உறவினர்கள் ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. பட்டியலின ஓ.பி.சி. பிரிவை சேர்ந்த குழந்தைகளுக்கு அதை நிரூபிக்க போதுமான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் இடஒதுக்கீடு கிடைக்கும். மேலும் பெற்றோரை இழந்து தந்தை வழி உறவினர்கள் இருந்தால் கல்வியில் மட்டும் 1 சதவீத இடஒதுக்கீடு கிடைக்கும் என அமைச்சர் சயோமதி தாக்கூர் கூறியிருக்கிறார். …

The post கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 1% இடஒதுக்கீடு!: மராட்டிய அரசு அதிரடி..!! appeared first on Dinakaran.

Tags : Corona ,Mumbai ,Maratham ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...