×

நாட்டின் முதல் வாட்டர் பிளஸ் நகரமாக அறிவிக்கப்பட்ட இந்தூர்!: ‘ஸ்வச் சர்வேஷன் 2021’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவிப்பு..!!

டெல்லி: இந்தியாவின் தூய்மையான நகரமான இந்தூர் ‘ஸ்வச் சர்வேஷன் 2021’ என்ற திட்டத்தின் கீழ் நாட்டின் முதல் வாட்டர் பிளஸ் நகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கழிவுநீரை வெளியேற்றுவதற்கு முன்னாள் சுத்திகரிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரில் குறைந்தது 25 சதவீதத்தை தோட்டக்கலை, தொழில்துறை உள்ளிட்ட பணிகளுக்கு மீண்டும் பயன்படுத்த வேண்டும். நகரின் குடியிருப்பு, தொழில்துறை மற்றும் வணிக பகுதிகளில் வடிகால் இணைப்புகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் படி,  ஸ்வச் சர்வேஷன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இந்தூர் நகரில் உள்ள 7 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், நாளொன்றுக்கு சுமார் 110 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. மத்தியப்பிரதேசத்தின் வணிக தலைநகரான இந்தூர் மற்ற நகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பதாக அம்மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கழிவுநீர் குழாய் இருந்து அப்படியே தண்ணீர் வெளியேற்றப்படாமல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுவதால் அங்குள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதில்லை. இதனால் குளங்கள், கிணறுகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் தூய்மையாக இருக்கின்றன. …

The post நாட்டின் முதல் வாட்டர் பிளஸ் நகரமாக அறிவிக்கப்பட்ட இந்தூர்!: ‘ஸ்வச் சர்வேஷன் 2021’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Indore ,Union Government ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED காதலியின் இறுதி சடங்கிற்கு பணமில்லை...