×

அந்தியூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் பொக்லைன் ஏற்றி அழிப்பு

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர்,  பர்கூர், அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர்  காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட  பகுதிகள் உள்ளது. இப்பகுதிகளில் கொரோனா உச்சத்தின்போது  மதுபானங்கள்  விற்க தடை செய்யப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி  கடந்த 3 மாதங்களாக சட்டவிரோதமாக  கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததாகவும், தமிழக  மதுபாட்டில்களை விற்பனை செய்வதற்காக பதிக்கியது உள்பட மொத்தம் 50 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கில், மொத்தம் 43 நான்கு மற்றும்  இருசக்கர வாகனங்களும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்நாடக, தமிழக  மதுபாட்டில்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில்  நேற்று மதியம், பறிமுதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட   மதுபாட்டில்கள் அந்தியூர் பெரிய ஏரிக்கரை பகுதியில் கொட்டப்பட்டது. கோபி  கலால் வட்டாட்சியர் ஷீலா, அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ஆகியோர்  முன்னிலையில் பொக்லைன் இயந்திரத்தைக்கொண்டு ஏரிக்கரைப் பகுதியில்   கொட்டப்பட்ட மது பாட்டில்கள் மீது ஏற்றி உடைத்து அழித்தனர். அழிக்கப்பட்ட மொத்த மது பாட்டில்களின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்….

The post அந்தியூர் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.5 லட்சம் மதுபாட்டில்கள் பொக்லைன் ஏற்றி அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Andhiyur ,Andiyur ,Erode district ,Parkur ,Ammapet ,Vellithirupur ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் ஆசனூரில் அதிகாலை சூறாவளி காற்றுடன் மழை