×

தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா?: உயர்நீதிமன்றம் கேள்வி !

சென்னை: தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர். சமீஹா பர்வீன்(18) ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இறந்துவிட்டார். இதற்காக சொந்த வீட்டை கூட விற்று சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது குடும்பத்தினர் கடையாலுமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர்.இந்த நிலையில் தடகள விளையாட்டில் ஆர்வம் கொண்ட சமீஹா பர்வீன், பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்று வந்தார். கடந்த 2017, 2018, 2019ல் நடைபெற்ற தேசிய தடகள போட்டிகளில் 9 தங்கம் உட்பட 12 பதக்கங்களை பெற்றுள்ளார். இதனையடுத்து, போலந்து நாட்டில் இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான டெப் அத்லெடிக்ஸ் தடகளப் போட்டிகளில் பங்கேற்க சமீஹாபர்வீன் தேர்வாகி உள்ளார் என தமிழ்நாடு அசோசியேஷன் இருந்து கடந்த ஜூலை 16ஆம் தேதி அவருக்கு கடிதம் வந்துள்ளது. அதில் டெல்லியில் ஜூலை 22 ல் நடைபெறும் தகுதி தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து பர்வீன் டெல்லிக்கு சென்று தகுதி தேர்வில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெற்று தகுதி பெற்றார். அதில் வேறு எந்த வீராங்கனைகளும் தேர்வாகவில்லை என்ற காரணத்தைக் கூறி சமீஹா பர்வீன் நிராகரிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஒன்றிய விளையாட்டுத்துறையிடம் புகார் அளித்தும் பதில் ஏதும் வரவில்லை. இது தொடர்பான தமிழக முதல்வரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர்….

The post தகுதி போட்டியில் தகுதி பெற்றும் பெண் என்பதால் சமீஹா பர்வீன் புறக்கணிக்கப்பட்டாரா?: உயர்நீதிமன்றம் கேள்வி ! appeared first on Dinakaran.

Tags : Sameha Parveen ,CHENNAI ,High Court ,Kanyakumari… ,Dinakaran ,
× RELATED அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி...