×

இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு : மண்ணுக்குள் புதைந்த 40க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்!!

ஷிம்லா : இமாச்சலப் பிரதேச மாநிலம் கின்னவூரில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவால் அரசு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டதால் பதற்றம் நிலவுகிறது.மண்ணுக்குள் 40திற்கும் அதிகமானோர் சிக்கி கொண்டு இருப்பதால் அச்சம் நிலவுகிறது. கனமழை காரணமாக உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மை காலமாக நிலச்சரிவு தொடர்கதையாகி வருகிறது. பெரும் மலையே சரிந்து விழும் பதறவைக்கும் காட்சி வெளியாகி நிலச்சரிவின் தீவிரத்தை உணர்த்தி வருகின்றன. இந்த நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் சிம்லா நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் திடீரென விழுந்ததில் அந்த வழியாக சென்று கொண்டு இருந்த அரசுப் பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட பல வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டன. சில வாகனங்கள் அப்பளம் போல நொறுங்கி கிடக்கின்றன. இடிபாடுகளுக்குள் 40த்திற்கும் அதிகமானோர் சிக்கி கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் பற்றிய தகவல் தெரியாததால் அச்சம் நிலவுகிறது.அங்கு இந்தோ – திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.மதியம் 12.45 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   …

The post இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு : மண்ணுக்குள் புதைந்த 40க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்!! appeared first on Dinakaran.

Tags : Landslide ,Pradesh ,Shimla ,Kinnavur ,Himachal Pradesh ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...