×

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை: என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்.,16- பாஜக; அதிமுக 14 தொகுதிகளில் போட்டி.!!!

புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக தலைமையில் மதச்சார்பற்ற அணிகள் ஓரணியாக சட்டமன்ற தேர்தலை களம் காண தயாராகி வருகின்றன. அதேவேளையில் தேஜ கூட்டணியில் இடம்பெற்ற பாஜக, அதிமுக அணிகள் ஓரணியாக நிற்க முடிவு செய்துள்ளன. இந்த அணியில் இடம்பெற்றிருந்த என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதல்வர் வேட்பாளர் பிரச்னை காரணமாக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை கையில் எடுத்துள்ள நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளின் அணிக்கு ரங்கசாமி தலைமை தாங்க வேண்டுமென திமுக முன்னாள் அமைச்சர் அழைப்பு விடுத்தார். மேலும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதல்வருமான ரங்கசாமியை மக்கள் நீதி மய்யம் மாநில பொதுச்செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினர். காங்கிரஸ் கட்சியும் என்.ஆர். காங்கிரசை கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பாஜக, ரங்கசாமியை சமாதானம் செய்து கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டது. இந்நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக-அதிமுக ஆகிய கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி உடன் பாஜக-அதிமுக ஆகிய கட்சிகளுக்கு உடன்பாடு ஏற்பட்டது. தொடர்ந்து, என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்து 2021 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 16 தொகுதியிலும், பாஜக – அதிமுக கூட்டணி 14 தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸ் கட்சி – 16, பாஜக -9, அதிமுக-4, பாமக ஒரு தொகுதியில் போட்டியிடுகின்றன. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தலைமையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி -பாஜக மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இருப்பினும், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக-அதிமுக கூட்டணியில் ரங்கசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டாத நிலையில் தொகுதி ஒப்பந்தத்தில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கையெழுத்திட்டுள்ளார். …

The post புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: முதல்வர் வேட்பாளர் அறிவிக்கவில்லை: என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்.,16- பாஜக; அதிமுக 14 தொகுதிகளில் போட்டி.!!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Assembly Election ,N.D.A. R. Kong ,Bajaka ,PUDUCHERRY ,N.D.A. R. CONG ,BHAJAKA ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...