×

வரிச்சுமையில் இருந்து ஏழை மக்களை ஆளும் திமுக அரசு பாதுகாக்கும்: திருமாவளவன் நம்பிக்கை

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா நெருக்கடி நிலையில் உடனடியாக வரிவருவாயைப் பெருக்குவதற்கு வாய்ப்பில்லை. எனவே, ‘வரியில்லாத பட்ஜெட்’ என கடந்த காலங்களில் செய்தததைப்போல  அல்லாமல், ஏழை-எளிய நடுத்தர மக்களை வரிச்சுமைகளிலிருந்து பாதுகாக்கும் வகையிலும் தொழிலதிபர்கள், பெருவணிகர்கள், ஒப்பந்ததாரர்கள்,  நிலக்கிழார்கள் போன்ற செல்வந்தர்களிடமிருந்து நியாயமான வரிகளை வசூலிக்கக்கூடிய வகையிலும் வரிவருவாய்க்கான ஒரு பட்ஜெட் அறிக்கையைத்  திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்பதே இன்றைய தேவையாகும்.அரசின் வருமானத்தை உயர்த்துவதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான வழிமுறைகளை தமிழக அரசு கையாளாது என்றும் நம்புகிறோம். தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களைக் கைவிடாமல், மக்களின் நம்பிக்கையை இழந்துவிடாத வகையில் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். …

The post வரிச்சுமையில் இருந்து ஏழை மக்களை ஆளும் திமுக அரசு பாதுகாக்கும்: திருமாவளவன் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : DMK government ,Thirumavalavan ,CHENNAI ,VC ,President ,Corona crisis ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...