×

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் : மு.க.ஸ்டாலின்

டெல்லி : ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும் மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் அவர்கள் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் கடந்த 2019 டிசம்பர் மாதம் ஜார்கண்டின் ஐந்தாவது முதலமைச்சராக பதவியேற்றார். பிறந்த நாளை முன்னிட்டு ஹேமந்த் சோரனுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி ஹேமந்த் சோரனுக்கு தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில், ‘ஜார்கண்ட் முதல்வர் ஸ்ரீ ஹேமந்த் சோரன் அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்துக்கும் இறைவனை பிரார்த்திக்கிறேன்,’என்றார். மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மைக்கான வலிமை மிகுந்த குரல்களில் ஒன்றாக வளர்ந்து வரும், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் தலைவராக விளங்கும் எனது சகோதரரும் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் அவர்களின் பிறந்தநாளில் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,’எனத் தெரிவித்துள்ளார். …

The post பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் : மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Hemand Sorean ,BC ,G.K. Stalin ,Delhi ,Mukti Morcha ,Chief of State ,Hemant Soren ,Hemant Sorean ,
× RELATED ஜார்கண்டில் 5 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை