×

நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணிக்காக விளையாட 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்

அர்ஜெண்டினா: பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறிய கால்பந்து ஜாம்பவான் மெஸ்சி பிஎஸ்ஜி அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியேறினார்.மெஸ்ஸி பார்சிலோனா கிளப்பில் நீடிப்பது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. ஆனால் லாலிகாவின் பொருளாதார விதிமுறைகள் புதிய ஒப்பந்தத்திற்கு தடையாக இருப்பதால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என கிளப் சார்பில் தெரிவிக்கப்பட்டது. தன் 13 வயதில் பார்சிலோனா கிளப்பில் இணைந்த மெஸ்ஸி, 34 வயதில் கிளப்பில் இருந்து வெளியேறினார். தற்போது கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி பிஎஸ்ஜி அணிக்காக விளையாட 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடிய மெஸ்சி கண்ணீர் மல்க வெளியேறியது குறிப்பிடத்தக்கது. …

The post நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி அணிக்காக விளையாட 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Lionel Messi ,PSG ,Argentina ,Messi ,Barcelona ,Dinakaran ,
× RELATED அர்ஜெண்டினாவில்...