×

ஈரத்துணியை காயப்போட்டபோது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி பலி

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பிச்சுமணி மனைவி இந்திரா(52), கூலி தொழிலாளி. இவரது மகள் மகாலட்சுமி(25) கணவனை பிரிந்து 3 வயது அவந்திகாவுடன் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை இந்திரா, தனது பேத்தி அவந்திகாவை இடுப்பில் வைத்துக் கொண்டு, வீட்டில் துணி காய வைத்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சார ஒயர் மீது துணி பட்டு, அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர்களது அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த மகாலட்சுமி, இருவரையும் காப்பாற்ற முயன்றார். இதில், அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post ஈரத்துணியை காயப்போட்டபோது மின்சாரம் தாக்கி தாய், மகள், பேத்தி பலி appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Pichamani ,Indira ,Ambedkar, Krishnagiri District ,Sinkarapet ,
× RELATED பெட்டிஷன் மேளாவில் 16 மனுக்களுக்கு தீர்வு