×

வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

செங்கல்பட்டு: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்டரங்கில்,  மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான ராகுல்நாத் தலைமையில், ஊரக உள்ளாட்சி தேர்தல்-2021 வரைவு   வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இது தொடர்பாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆனந்தன், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும்  திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக, தேமுதிக,பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். …

The post வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Ruler ,Chengalpattu ,Rural Elections ,Local Elections ,District ,Election Officer ,Rakulnath ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...