×

கிராம உதவியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். வட்ட துணைத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்றார். வட்ட தலைவர்கள் குன்றத்தூர் பாஸ்கரன், ஸ்ரீபெரும்புதூர் நாராயணன், வாலாஜாபாத் எட்டியப்பன், வட்ட செயலாளர்கள் உத்திரமேரூர் பெருமாள், காஞ்சிபுரம் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் மாநில பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார். இதில் வரும் செப்டம்பர் மாதம் மண்டல பொதுக்குழு மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நடத்துவது மற்றும் தமிழ்நாடு ஊரக வருவாய் துறையில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது….

The post கிராம உதவியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Grama Assistants Union Consulting ,Kanchipuram ,Kanchipuram District Grama Assistants Association ,Village Assistants Union Consulting ,Dinakaran ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...