×

நீதிபதி முன் போலீசார் நடவடிக்கை ரூ.7 லட்சம் மதிப்பிலான எரி சாராயம் அழிப்பு

மயிலாடுதுறை : கடந்த 2.1.2021ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் போலீஸ் சரக எல்லைக்குட்பட்ட கோனேரிராஜபுரம் மாரியம்மன் கோவில் கீழத்தெருவை சேர்ந்த சின்னப்பிள்ளை மற்றும் ராமதுரை என்பவர்கள், அவரது வீட்டுக் கொல்லைப்புறத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 54 பிளாஸ்டிக் கேன்களில் இருந்த ஆயிரத்து 890 லிட்டர் எரிசாராயத்தை மயிலாடுதுறை மதுவிலக்கு போலீசார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கோபு மகன்கள் சுதாகரன் (24), சூர்யா (23), சிங்காரு மகன் சுந்தர்ராஜன் (39), புதுச்சேரி மாநிலம் குரும்பகரம் கன்னியம்மன் கோவில் தெரு சுந்தரமூர்த்தி (38) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அப்போது கைப்பற்றப்பட்ட எரி சாராயத்தில் தலா ஒரு லிட்டர் வீதம் 54 கேன்களில் இருந்து மாதிரிக்கு எடுத்து கோர்ட்டு உத்தரவின்படி தஞ்சாவூர் ராசாயன பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டது. மீதமிருந்த ஆயிரத்து 836 லிட்டர் எரிசாராயத்தை மயிலாடுதுறை 2வது குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல்கனி மேற்பார்வையிலும், மயிலாடுதுறை மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா முன்னிலையிலும் மதுவிலக்கு போலீசார் எரிசாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இந்த சாராயத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது….

The post நீதிபதி முன் போலீசார் நடவடிக்கை ரூ.7 லட்சம் மதிப்பிலான எரி சாராயம் அழிப்பு appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai District ,Palayur Police ,Konerirajapuram Mariyamman Temple Keezhatheru ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி