×

சம்யுக்தா விஸ்வநாத்தின் ‘டபுள் ஆக்குபன்சி’

அவ்னி மூவிஸ் சார்பில் குஷ்பு சுந்தர், பென்ஸ் மீடியா சார்பில் ஏ.சி.எஸ்.அருண் குமார் இணைந்து தயாரிக்கும் படம், ‘டபுள் ஆக்குபன்சி’. புதுமையான கதையம்சம் கொண்ட ரொமான்டிக் பேண்டஸி படமான இதை அஸ்வின் கந்தசாமி எழுதி இயக்குகிறார். சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா விஸ்வநாத், வினோத் கிஷன், விடிவி கணேஷ், பக்ஸ் நடிக்கின்றனர். அறிவியல், நம்பிக்கை ஆகியவற்றுக்கு இடையிலான மோதல், ஒருவரை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் நேசிப்பதில் இருக்கும் வலி மிகுந்த அழகு ஆகியவற்றை மையப்படுத்தி இந்த மாயாஜால யதார்த்த கதை உருவாக்கப்பட்டுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தோஷ், இதில் சவாலான முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது ஜோடியாக, ‘கட்சி செரா’ சம்யுக்தா விஸ்வநாத் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசை அமைக்க, சாந்தகுமார் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். செந்தில் ராகவன் அரங்கம் அமைக்க, பிரவீன் ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Tags : Samyukta Vishwanath ,Khushbu Sundar ,Avni Movies ,ACS ,Arun Kumar ,Benz Media ,Ashwin Kandasamy ,Santhosh ,Reshma Venkatesh ,Vinod Kishan ,VTV Ganesh ,Bucks ,
× RELATED என்னை யாரும் அடக்க முடியாது: பிரியங்கா சோப்ரா