×

8 மாஜி அதிமுக அமைச்சர்கள், எடப்பாடி மகன், சம்பந்திக்கு வருமான வரித்துறை திடீர் நோட்டீஸ்: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மகன், சம்பந்தி ஆகியோருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதிமுகவில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பல்வேறு மட்டங்களில் ஊழல் நடந்துவந்தது. அவரது மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வமும் பின்னர் எடப்பாடி பழனிசாமியும் முதல்வராக பணியாற்றினர். இந்த காலகட்டத்தில் ஜெயலலிதாவையும் மிஞ்சிய அளவுக்கு கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் ஊழல் கோலோச்சி வந்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்ததால், முறைகேடுகள் அதிகளவில் நடந்தன.  இதைத்தொடர்ந்து பாஜ தலைமையிலான மத்திய அரசு தமிழக அரசின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தது. ஒருகட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் அப்போது தலைமைச்செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் அறையிலேயே வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்புக்கு உள்ளானது. இதன் தொடர்ச்சியாக குட்கா வழக்கில் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித் துறையினர் ஒரேநேரத்தில் சோதனை நடத்தினர். ஆனால் இதன்பின் மத்திய பாஜ அரசுடன் அதிமுக இணக்கமான போக்கை கடைப்பிடித்ததால், தொடர் நடவடிக்கை ஏதும் இல்லாமலிருந்தது. எனினும் அதிமுக அமைச்சர்கள் பலரையும் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறையினர் கண்காணித்து வந்தனர்.  இதற்கிடையே ஆட்சி மாற்றத்துக்கு பிறகு  மாஜி போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் அலுவலகங்கள் என 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதனால் பல்வேறு மாஜி அமைச்சர்களும் கலக்கம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் மாஜி அமைச்சர் வேலுமணி ஆகியோர் டெல்லி விரைந்தனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்தனர். மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் மோடியும் அமித்ஷாவும் இதற்கு உறுதி கூறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உள்பட 8 மாஜி அமைச்சர்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடியின் மகன் மிதுன்குமார் மற்றும் அவரது சம்பந்தி ஆகியோருக்கு தற்போது வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருமானத்துக்கு முறையான கணக்கு விவரங்களை காட்டாததால் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சில புகார்களுக்கு விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஒரேநேரத்தில் 8 அதிமுக மாஜி அமைச்சர்கள், எடப்பாடியின் மகன், சம்பந்தி ஆகியோருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுகவை கபளீகரம் செய்ய பாரதிய ஜனதா திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், வருமானவரித்துறை மூலம் எடுக்கப்பட்டு வரும் இந்த நடவடிக்கை அதிமுக மாஜி அமைச்சர்கள் மத்தியில் பீதியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது….

The post 8 மாஜி அதிமுக அமைச்சர்கள், எடப்பாடி மகன், சம்பந்திக்கு வருமான வரித்துறை திடீர் நோட்டீஸ்: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : 8 Maji High ,Edapadi ,TX ,Chamhandi ,Tamil Nadu ,Chennai ,Department of Revenue ,Chambandhi ,Chief Minister ,Edapadi Palanisamy ,Maji ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு