×

கீரை சாப்பிட்ட 3 பேர் மயக்கம்

புழல்: செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் லட்சுமிபுரம் முத்தாலம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் தன்ராஜ் (32). இவரது மனைவி சித்தாரா (29). இவர்களுக்கு யாழினி (6),  ஹரிஷ் (5) என்ற குழந்தைகள் உள்ளனர். தன்ராஜ் தனது வீட்டின் அருகில் வளர்க்கும் கீரைக்கு பூச்சி மருந்து தெளித்து இருந்தார். இதுபற்றி அறியாத  சித்தாரா நேற்று அந்த கீரையை பறித்து, அதில்  தோசை சுட்டு, தனது குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் 3 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அக்கம்ணபக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்….

The post கீரை சாப்பிட்ட 3 பேர் மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Sengkundam ,Pammadugulam Lakshumipuram Muthalamman Temple Street ,Thanraj ,
× RELATED ரயில் மோதி 3 பேர் பலி