×

தேர்தல் பிரசாரத்திற்கான ஒலிப்பெருக்கிகள் பயன்பாடு குறித்து வழிகாட்டு நெறிமுறை: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பொன்னையா வெளியிட்ட அறிக்கை: தேர்தல் நோக்கங்களுக்காக நிலையாகவோ, பொது கூட்டங்களுக்காகவோ அல்லது வாகனங்களிலோ பொருத்தப்படும் ஒலிப்பெருக்கிகளை தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி பெற்று பயன்படுத்தப்படவேண்டும். இரவு 10 மணி முதல் காலை 6 வரை பயன்படுத்த அனுமதி இல்லை. பொதுக்கூட்டங்களிலோ, வாகனங்களிலோ பொருத்தப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை தடை செய்யப்பட்ட நேரத்தில் பயன்படுத்தக்கூடாது.அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒலிப்பெருக்கியை பயன்படுத்த தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெறப்பட்ட அனுமதி கடிதத்தை வாகனங்களில் ஒட்டி பார்வையில் படும்படி காட்சிப்படுத்தப்படவேண்டும். அனுமதியின்றி ஒலிப்பெருக்கி பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு வாகனமும் ஒலிப்பெருக்கி மற்றும் அதனுடன் பயன்படுத்தப்படும் இயந்திரங்களும் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். பெட்டி வகை ஒலிப்பெருக்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும். கூம்பு வகையான ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தேர்தல் பிரசாரத்திற்கான ஒலிப்பெருக்கிகள் பயன்பாடு குறித்து வழிகாட்டு நெறிமுறை: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District ,Returning ,Officer ,Collector ,Ponnaiah ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு