×

கேரளாவில் இருந்து சென்னை வரும் ரயில் பயணிகளுக்கு 2வது நாளாக கொரோனா பரிசோதனை

சென்னை: கேரளாவில் இருந்து சென்னை வரும் ரயில் பயணிகளுக்கு RTPCR கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டுக்கு வரும் கேரள பயணிகள் இரு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் அல்லது கொரோனா தொற்றின்மை சான்றிதழை காண்பிப்பது கட்டாயம் என்ற நடைமுறை நேற்று நடைமுறைக்கு வந்தது.அதன் அடிப்படையில் கேரளாவில் இருந்து சென்னை வரக்கூடிய பயணிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் உதவியுடன் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் சோதனை செய்தனர். இதில் உரிய சான்றிதழ்கள் இல்லாத பயணிகளுக்கு 2வது நாளாக இன்றும் RTPCR சோதனை மேற்கொள்ளப்படுகிறது.கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் பயணியின் பெயர், சென்னையில் அவர்கள் வசிக்கும் முகவரி, செல்போன் எண் மற்றும் பயணச்சீட்டின் பிஎன்ஆர் எண் ஆகியவற்றை பதிவு செய்கின்றனர். மறு உத்தரவு வரும் வரை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடத்தப்படும் என மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்….

The post கேரளாவில் இருந்து சென்னை வரும் ரயில் பயணிகளுக்கு 2வது நாளாக கொரோனா பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chennai ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு