×

கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்குவோர் மீது நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

திண்டுக்கல் : திண்டுக்கல் கலெக்டர் விசாகன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்திற்கு கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து வரக்கூடிய நபர்கள் 72 மணிநேரத்திற்குள் கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் அல்லது 2 முறை தடுப்பூசி செலுத்தி கொண்ட விபரத்தினை சோதனைச் சாவடிகளில் காண்பிக்கபட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஸ் கார்டன், கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடுகள் அனைத்தும் கொரோனா நோய் தடுப்பு செய்யும் காரணத்திற்காக மூடப்பட்டு உள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான கூக்கால் நீர்வீழ்ச்சி, ஐந்து வீடு நீர் வீழ்ச்சி (பேத்துப்பாறை), வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, பசுமை பள்ளத்தாக்கு, டால்பின் முனை ஆகிய இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.கொடைகானல் வட்டத்தில் உள்ள பட்டா இடங்களிலோ, அரசு இடங்களிலோ தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்குவோர் மீதும், தங்குவதற்கு ஏற்பாடு செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த ஒரு நிறுவனத்திலோ, கடையிலோ கொரோனா விதிகளை பின்பற்றாத சூழ்நிலை அறியப்பட்டால், உடனடியாக அவைகளை மூடுவதற்கான நடவடிக்கையை உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, காவல்துறை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.மலைப்பகுதிகளில் அனுமதிகப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மற்றும் மது அருந்தி வாகனம் ஓட்டுபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, பொதுமக்கள் நலன் கருதி அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்….

The post கொடைக்கானலில் கூடாரம் அமைத்து தங்குவோர் மீது நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dintugul ,Collector ,Visakan ,Kerala ,Dinakaran ,
× RELATED ஊட்டி-கொடைக்கானல் செல்ல இ-பாஸ்...