×

கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் ‘ஜாக்ஸ்பேரோ’..! மீதி சில்லரையும் ‘நோ மிஸ்ஸிங்’

பழநி: பழநியில் வளர்ப்பு நாய் ஒன்று கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி கலக்கி வருகிறது. பழநி டவுன் சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் தாஸ்பெர்னான்டஸ் (54). டுடோரியல் ஆசிரியராக உள்ளார். இவர் லேபர்டர் வகை நாய் வளர்த்து வருகிறார்.  இதற்கு ஜாக்ஸ்பேரோ என பெயரிட்டுள்ளார். 4 வயதான இந்த நாய் தனது உரிமையாளரின் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைகளுக்கு சென்று வாங்கி வருகிறது. வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக்கடை, காய்கறிக்கடை, பால் பூத், இறைச்சி கடை ஆகியவற்றிற்கு நாய் சரியாக செல்கிறது. ஒரு கூடையில் தேவையான பொருட்களின் லிஸ்ட் மற்றும் அதற்கான பணத்தை வைத்து விட்டால் கடைக்கு செல்லும் ஜாக்ஸ்பேரோ பொருட்களுடன் மீதி சில்லறையையும் வாங்கி வந்து விடுகிறது.உழவர்சந்தை வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு நல்ல நண்பனாக விளங்கி வருகிறது. நாய் ஒன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஜாக்ஸ்பேரோவின் உரிமையாளர் தாஸ்பெர்னான்டஸ் கூறியதாவது: ஜாக்ஸ்பேரோ குட்டியாக இருந்தது முதல் பயிற்சி அளித்து வந்தேன். கடைகளுக்கு செல்லும்போது உடன் அழைத்து சென்று வந்தேன். கடந்த 1 வருடமாக கடைகளுக்கு அதுவாகவே சென்று வருகிறது. அதுபோல் வீட்டிற்குள் பேப்பர் எடுத்து வந்து தருவது போன்ற வேலைகளையும் ஜாக்ஸ்பேரோவே செய்யும். எங்கள் வீட்டிற்கு மட்டுமின்றி பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்காகவும் கடைக்கு சென்று வரும். இந்த ஏரியா மக்களின் செல்ல பிள்ளையாக ஜாக்ஸ்பேரோ திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்….

The post கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் ‘ஜாக்ஸ்பேரோ’..! மீதி சில்லரையும் ‘நோ மிஸ்ஸிங்’ appeared first on Dinakaran.

Tags : Jackspero ,No Missing ,Padani ,Palanini Town ,Salmupurat ,Jacksboro ,Dinakaran ,
× RELATED விநாயகர் சதுர்த்திக்கு 7 நாட்களே உள்ள...