×

ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் பூனியா அரையிறுதிக்கு தகுதி: சீமா பிஸ்லா ஏமாற்றம்

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ இந்தியாவின்  பஜ்ரங் புனியா இன்று முதல் சுற்றில், கிர்கிஸ்தானின்  எர்னாசர் அக்மடாலீவ்வுடன் மோதினார். இதில் 3-3 என சமனில் இருந்த போதிலும்  பஜ்ரங் பூனியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கால் இறுதி போட்டியில் ஈரான் வீரர் போர் டெசாவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார்.இந்திய மல்யுத்த வீராங்கனை சீமா பிஸ்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியா வீராங்கனையிடம் 1-3 எனத் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறினார். டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சீமா பிஸ்லா காலிறுதிக்கு முந்தைய சுற்றில் துனிசியாவின் சாரா ஹம்டியை எதிர்கொண்டார். இதில் 1-3 என சீமா பிஸ்லா தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்….

The post ஒலிம்பிக் மல்யுத்தம்: பஜ்ரங் பூனியா அரையிறுதிக்கு தகுதி: சீமா பிஸ்லா ஏமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Olympic wrestling ,Bajrang Punia ,Seema Bisla ,India ,Olympic wrestling Men ,Kyrgyzstan ,Ernazar Akhmadaliev… ,Dinakaran ,
× RELATED ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிப்பு