×

தமிழகம் முழுவதும் 1,120 போலீசார் அதிரடி மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும். 1120 போலீசார் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். குறிப்பாக எஸ்பிக்கள் முதல் டிஜிபிக்கள் வரை மாற்றம் செய்யப்பட்டனர். இந்தநிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்ற பிறகு, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக மாநிலம் முழுவதும் காவலர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு மாற்றம் கேட்டு பல மாதங்களாக காத்திருந்தனர்.காவலர்களைப் பொறுத்தவரை மாவட்டங்களுக்குள் மாற்றம் வேண்டும் என்றால் எஸ்பியே மாற்றிவிடுவார். சரகத்துக்குள் மாற்றம் வேண்டும் என்றால் டிஐஜியும், மண்டலத்துக்குள் மாற்றம் வேண்டும் என்றால் ஐஜியும் உத்தரவு பிறப்பிப்பார்கள். ஆனால் மண்டலம் விட்டு மண்டலம் மாற்ற வேண்டும் என்றால் ஏடிஜிபி அல்லது டிஜிபி ஆகியோர் மாறுதல் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதில், காவலர்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு சிறப்புக்காவல்படையில் இருக்கும்போது பணி மாறுதல் கிடையாது. ஆயுதப்படைக்கு பதவி உயர்வு பெறும்போது, மாறுதல் பெறலாம். சிலர் ஆயுதப்படைக்கு சென்ற பிறகு பணி மாறுதல் பெறாமல், பணியாற்றுவார்கள். அதன்பின்னர் ஆயுதப்படையில் இருந்து போக்குவரத்து அல்லது சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு பதவி உயர்வு பெறும்போது, சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வேண்டும் என்று விரும்பும் காவலர்கள் பணி மாறுதல் கேட்பார்கள்.ஆனால், விண்ணப்பம் செய்தவர்களில் சீனியாரிட்டி அடிப்படையில் காலியிடங்களில் அவர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்படும். ஆனால் ஆட்சி மாற்றத்துக்கு முன்னர் பல மாதங்களாக விண்ணப்பம் கொடுத்து காத்திருந்தவர்கள், பணி மாறுதல் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த தகவல் தற்போது டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு தெரியவந்ததும், அவ்வாறு பணிமாறுதல் கேட்ட சுமார் 1,120 காவலர்களுக்கு நேற்று பணி மாறுதல் வழங்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். ஏற்கனவே காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட்டது. தற்போது மொத்தமாக பணிமாறுதல் வழங்கப்பட்டது காவலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது….

The post தமிழகம் முழுவதும் 1,120 போலீசார் அதிரடி மாற்றம்: டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DGB ,Chennai ,Silendrababu ,Sylendrababu ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...