×

தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் மூத்த வக்கீல்கள் நியமனம்

சென்னை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்பான வழக்குகளில் ஆஜராவதற்காக 2 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் மற்றும் 30 மூத்த வக்கீல்களையும் நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்பாக நடைபெறும் வழக்குகளில், தமிழக அரசு சார்பில் ஆஜராவதற்காக வி.கிருஷ்ணமூர்த்தி, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். இதேபோல் தமிழக  அரசு தொடர்பான முக்கிய வழக்குகளில் ஆஜராக மூத்த வக்கீல்கள் நியமிக்கப்படுகிறார்கள்.தமிழக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்தின் பரிந்துரையின் அடிப்படையில், அட்டர்னி ஜெனரல், சொலிசிட்டர் ஜெனரல், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மூத்த வக்கீல்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தஹி, கோபால் சுப்பிரமணியன், ராஜீவ் தவான், ராகேஷ் திவாரி, விகாஷ் சிங், ரஞ்சித் குமார், துஷ்யந்த் தவே, சேகர் நாப்டே, ஆர்.வெங்கட்ரமணி, கே.வி.விஸ்வநாதன், வி.கிரி, விவேக் தங்கா, சித்தார்த் லுத்ரா, பி.எஸ்.பட்வாலியா, கற்பகவிநாயகம், ஜெய்தீப் குப்தா, ராஜு ராமச்சந்திரன், சஞ்சய் ஹெக்டே, பி.எஸ்.நரசிம்மா, எம்.எஸ்.கணேஷ், அர்ஜித் பிரசாத், கே.ராதாகிருஷ்ணனன், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன், ஆர்.விடுதலை, மரிய அற்புதம், பிரான்சிஸ் ஜூலியன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜராவார்கள்….

The post தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் மூத்த வக்கீல்கள் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு...