×

அடையாறு ஆற்றில் புதிதாக கால்வாய், தடுப்புச்சுவர் அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் வெளியிட்டுள்ள உத்தரவு: சோமங்கல துணை நதி முதல் அடையாாறு ஆறு வரை வெளிவட்ட சாலை வழியாக புதிதாக  4 மீட்டர் உயரத்தில் 2 மீட்டர் அகலத்தில் கால்வாய் அமைக்கப்படுகிறது. திறந்த வெளி கால்வாயில் 380 மீட்டர் நீளத்தில் கைப்பிடி தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது. ரெகுலேட்டர் ஒன்றும் அமைக்கப்படுகிறது. அடையாற்றில் குறிப்பிட்ட தூரம் வரை 2 மீட்டர் ஆழப்படுத்தப்படுகிறது. அடையாற்று தண்ணீர் செல்ல வசதியாக திருநீர் மலை பகுதியில் பாறைகள் அகற்றப்படுகிறது. மேலும், வெள்ளபாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு தடுப்பு சுவர் உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை கடந்த பிப்ரவரி 19ம் தேதியிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணை கடந்த பிப்ரவரி 26ம் தேதிக்கு பிறகு தான் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. எனவே, இந்த அரசாணை பழைய தேதியில் ரூ.70 கோடி ஒதுக்கி வெளியிடப்பட்டதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் அரசாணை வெளியிட்டாலும் டெண்டர் விட முடியாத நிலை ஏற்பட்டதாக பொதுப்பணித்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்….

The post அடையாறு ஆற்றில் புதிதாக கால்வாய், தடுப்புச்சுவர் அமைக்க ரூ.70 கோடி ஒதுக்கி அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,Adyar river ,Chennai ,Tamil Nadu Public Works Department Government ,Manivasan ,Somangala ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...