×

கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு: பந்தநல்லூர் போலீசார் லஞ்சம் வாங்கியும் வீண் வழக்கு போடுவதாக புகார்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் சட்டவிரோத மணல் கொள்ளைக்கு லஞ்சம் வாங்கிக்கொண்டும் வீண் வழக்கு போடுவதாக குற்றம்சாட்டி கொரோனா தொற்று பாதித்தவர் காவல் நிலையம் முன்பு நின்று போலீசாரை மிரட்டும் காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.பந்தநல்லூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு நடைபெறுவது தொடர்கிறது. இதனை தடுக்கும் பொருட்டு ரோந்து சென்ற போலீசார் 3 டிராக்டர் உட்பட வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதில் டிராக்டர் உரிமையாளரான இளையராஜா என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.தகவலறிந்து மருத்துவமனையில் இருந்து நேரடியாக காவல்நிலையத்திற்கு ஆவேசமாக வந்த அவர் தம்மிடம் லஞ்சம் வாங்கிய பின்பும் வாகனங்களை பறிமுதல் செய்வதாக போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.இளையராஜா மீது நோய் தொற்றை பரப்புவது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, தவறான கருத்தை பரப்புவது ஆகிய 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்….

The post கொள்ளிடம் ஆற்றில் மணல் திருட்டு: பந்தநல்லூர் போலீசார் லஞ்சம் வாங்கியும் வீண் வழக்கு போடுவதாக புகார் appeared first on Dinakaran.

Tags : Kollidam river ,Bandanallur police ,Thanjavur ,Bandanallur ,Dinakaran ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி