×

சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கோவை சென்றார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்

சென்னை: கலைஞர் திருவுருவ பட திறப்பு விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். நேற்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு சென்றார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் திருவுருவ பட திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் காலை சென்னை வந்தார். பின்னர். நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு சென்னை, தலைமை செயலக சட்டப்பேரவை வளாகத்தில் நடந்த விழாவில் கலைஞர் திருவுருவ படத்தை திறந்து வைத்து பேசினார். விழா முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஜனாதிபதி தங்கினார். இதையடுத்து, நேற்று காலை 9.30 மணிக்கு கிண்டி, ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட ஜனாதிபதி சென்னை விமான நிலையம் வந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து 9.55 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு சென்றார். அவருடன் அதே விமானத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் சென்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, விமான நிலையம் சென்று ஜனாதிபதியை வழியனுப்பி வைத்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புத்தகம் பரிசளித்தார். கோவை சென்ற ஜனாதிபதி காலை 11.40-க்கு சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்தார். அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக அரசு சார்பில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் கார் மூலம் தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகை சென்றார். ஊட்டியில் 3 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கும் ஜனாதிபதி முதுமலை புலிகள் காப்பகம், பைக்காரா படகு இல்லம் மற்றும் தோடர் பழங்குடியின கிராமத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 6ம் தேதி ஜனாதிபதி, தமிழகத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறார். ஜனாதிபதி 3 நாட்கள் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்குவதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சூலூர் விமான படைத்தள பகுதியில் டிரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது….

The post சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கோவை சென்றார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : President ,Ramnath Govindh ,Gov ,Chennai ,Chief President ,Muhammad G.K. Stalin ,Ramnath Gowind ,Thiruvuruwa ,CM ,G.K. Stalin ,
× RELATED வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில்...