×

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோரின் அதிகாரப்பூர்வ பட்டியலை பாஜ தலைமை வெளியிடும்: கே.டி.ராகவன் தகவல்

சென்னை: தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை செங்கல்பட்டு மாவட்ட பார்வையாளர் வேதசுப்பிரமணியம் தலைமையில், மத்திய பாஜ அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, சிட்லபாக்கம் குளம் அருகே முத்தாலம்மன் கோயிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பாஜவினர் கொடியேந்தி பேரணியாக சென்றனர். இதில் மாநில பாஜ பொது செயலாளர் கே.டி.ராகவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜ வேட்பாளர்களின் பட்டியல் பல்வேறு ஊடகங்களின் யூக அடிப்படையில் உலா வருகிறது. இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியலை பாஜ தலைமை வெளியிடும். தமிழகத்துக்கு பிரதமர் மோடி குறைந்தபட்சம் 3 முறையாவது வருகை தருவார். அனைத்து கட்சிகளின் கூட்டணி உறுதியான பிறகு, கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கால அவகாசம் இருப்பதால், ஒவ்வொரு கட்சியாக உடன்பாடு ஏற்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்….

The post சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோரின் அதிகாரப்பூர்வ பட்டியலை பாஜ தலைமை வெளியிடும்: கே.டி.ராகவன் தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,KT Raghavan ,CHENNAI ,Chitlapakkam ,Tambaram ,Chengalpattu ,Vedasubramaniam ,Central BJP ,
× RELATED ஆளும் பாஜக அரசு தேர்தலில் தோல்வி...