×

பெகாசஸ் விவகாரம் பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு: நாளை விசாரணை

புதுடெல்லி: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி பத்திரிகையாசிரியர் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள், 2 ஒன்றிய அமைச்சர்கள் உள்பட 300 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக அம்னெஸ்டி அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிய வந்ததாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து, மூத்த பத்திரிகையாசிரியர் என்.ராம், சசிகுமார், சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ், வழக்கறிஞர் எம்எல். சர்மா உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உளவு மென்பொருளை பயன்படுத்த உரிமம் பெறப்பட்டுள்ளதா? யாருடைய செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டன என்ற பட்டியலை அரசிடம் இருந்து பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தலைமையிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது….

The post பெகாசஸ் விவகாரம் பத்திரிகை ஆசிரியர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு: நாளை விசாரணை appeared first on Dinakaran.

Tags : Pegasus Affair Magazine Teachers Association ,Supreme Court ,New Delhi ,Journalists Association ,Pegasus ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...