×

750 கிலோ குட்கா பறிமுதல்

ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம் வினோபா நகர் 6வது தெருவில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கிவைத்து விற்பதாக ஆவடி டேங்க் பேக்டரி போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருந்தது. புகாரின்பேரில் போலீசார் வீட்டின் உரிமையாளர் திருப்பதி(39) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 750 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். மேலும் அவருக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்….

The post 750 கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Veerapuram Vinoba Nagar 6th Street ,Aavadi ,Dinakaran ,
× RELATED சென்னை பட்டாபிராம் அருகே வைக்கோல்...