×

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு கடற்படையினரை கைது செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 28ம் தேதி வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றிருந்தனர். கோடியக்கரையிலிருந்து தென் கிழக்கில் 5 கடல் மைல் தொலைவில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் பதுங்கி இருந்த கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையை உரசிக் கொண்டு துப்பாக்கி குண்டு சென்றது. இந்தத் தாக்குதலில் கலைச்செல்வன் படுகாயமடைந்து நாகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையினரை உடனே கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு கடற்படையினரை கைது செய்ய வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMAK ,Youth Leader ,Akkaraipet, Nagapattinam district ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...