×

புரட்சி பாரதம் கட்சி கலந்தாய்வு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் மத்திய மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, தலைவர் பிரீஸ் ஜி.பன்னீர் ஆகியோர் தலைமை வகித்தனர். பொருளாளர் நயப்பாக்கம் டி.மோகன் வரவேற்றார். மாநில நிர்வாகி சி.பி.குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் எம்.மாறன், ஐ.ஏழுமலை, பா.காமராஜ், முல்லை கே.பலராமன்,  டி.ருசேந்திரகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் மாநில நிர்வாகிகள் எஸ்.செல்வம், பழஞ்சூர் பா.வின்சென்ட், பூவை ஆர்.சரவணன், பி.பரணிமாரி, கே.எஸ்.ரகுநாத் டி.கே.சீனிவாசன், ஏகாம்பரம், என்.மதிவாசன் பி.பெரமையன், டி.கே.சி.வேணுகோபால், எம்.பி.வேதா, ஏ.ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் என்.பி.முத்துராமன் நன்றி கூறினார். இதில் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ருசேந்திரகுமாருக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் செஞ்சி ஜெ.ஜவகர், செயலாளர் காட்டுப்பாக்கம் எஸ்.டேவிட், அமைப்பாளர் டி.எம்.எஸ்.கோபிநாத், கண்ணன்,இளவரசன், பாலாஜி, குமரேசன், மோகன்ராஜ், பிரசாந்த், பாரத், பேட்டை பாலாஜி, ராஜ்குமார் ஆகியோர் ஆளுயர ரோஜா மாலை அணிவித்து வாழ்த்தினர்….

The post புரட்சி பாரதம் கட்சி கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Pratchii Bharatham Party ,Tiruvallur ,Pratachi Bharatham Party ,District Secretary ,Koodapakkam E. Kutty ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை