×

இன்று ஆடிப்பெருக்கு பேரூர் படித்துறையில் திதி தர்ப்பணம் அளிக்க தடை: நொய்யல் ஆற்றிற்கு செல்லும் வழிகள் மூடல்

கோவை:  ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் திதி, தர்ப்பணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில், நொய்யல் ஆற்றிற்கு செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட்டது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, சில கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு மற்றும் வரும் 8-ம் தேதி ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களையொட்டி அதிக அளவிலான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில்களில் கடந்த 1-ம் தேதி (இன்று) முதல் 3-ம் தேதி வரையும் மற்றும் ஆடிமாவாசை தினமாக 8-ம் தேதியும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், ஆற்றோரங்களில் திதி மற்றும் தர்ப்பணம் செய்யவும் அனுமதி இல்லை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் நொய்யல் ஆற்றில் பக்தர்கள் வழிபடவும், திதி, தர்ப்பணம் கொடுப்பதை தடுக்கும் வகையிலும், ஆற்றிற்கு செல்லும் அனைத்து வழிகளும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்….

The post இன்று ஆடிப்பெருக்கு பேரூர் படித்துறையில் திதி தர்ப்பணம் அளிக்க தடை: நொய்யல் ஆற்றிற்கு செல்லும் வழிகள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Perur Paditura ,Adiper ,Noyal river ,Coimbatore ,Perur Padithura ,Aadiperuk ,
× RELATED கனமழை பெய்தும் நொய்யல் ஆற்றில் மழைநீருடன் சாயக்கழிவுநீர்