×

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை நெல்லையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு: 18ம் நூற்றாண்டை சேர்ந்தது

நெல்லை: நெல்லை டவுனில் வீட்டில் வைத்து பூஜை செய்து வந்த 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஐம்பொன் சிலையை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் முதியவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.ெநல்லை டவுனில் ஒரு வீட்டில் பூஜை அறையில் ஐம்பொன்சிலை வைத்திருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங், ஐஜி தினகரன் உத்தரவின் பேரில், நெல்லை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மலைச்சாமி, இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் நேரடி மேற்பார்வையில் எஸ்ஐக்கள் சண்முகநயினார், சகாயசெல்வின், மெர்லின்பால், ஏட்டுக்கள் நாகேந்திரன், சிவபாலன், மாரிமுத்து, திருவாக்கு ஆகியோர் அடங்கிய சிறப்பு படையினர் டவுன் பகுதியில் கண்காணித்து வந்தனர்.நெல்லை டவுன் சாலியர் தெருவைச் சேர்ந்த கோவிந்தன் (74) என்பவர் வீட்டில் சிலை தடுப்பு சிறப்பு படையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் சுமார் 2 அடி உயரம் உள்ள 12 கிலோ எடை கொண்ட லட்சுமி அம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலை 18ம் நூற்றாண்டை சேர்ந்த சிலை எனவும், சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனினும் வரலாற்று ஆய்வாளர்கள், சிலை மதிப்பீட்டாளர்கள் வந்து ஆய்வு செய்த பின்புதான் சிலையின் உண்மையான மதிப்பீடு ெதரியவரும் என போலீசார் தெரிவித்தனர். சிலையை வீட்டில் வைத்திருந்த கோவிந்தனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 1990ம் ஆண்டு அவரது உறவினர் ஒருவர் பூஜை செய்ய கொடுத்ததாகவும்,   கடந்த 30 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பூஜை செய்து வருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.  இதையடுத்து கண்டிகைபேரி கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் முன்னிலையில் சிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். எனினும் இந்த சிலை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என சிலை தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கோவிந்தனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நடவடிக்கை நெல்லையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்பு: 18ம் நூற்றாண்டை சேர்ந்தது appeared first on Dinakaran.

Tags : Anti-Idol Smuggling Unit ,Aimpon ,Nella ,Nellai ,Aimbon ,Nellai Town ,
× RELATED மரக்கன்று நட தோண்டிய குழியில் கிடைத்த...