×

ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணி மும்முரம்

ஊட்டி: ஊட்டியில் உள்ள ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் பார்வையிடும் வகையில் பல்வேறு இடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், முக்கியமானது ஒன்றும், பழமை வாய்ந்ததும் ஆதாம் நீரூற்று. இது ஊட்டி நகரில் மைய பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் உள்ளது. இரவு நேரங்களில் இந்த ஆதாம் நீரூற்று வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். இதன் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த நீரூற்று பராமரிக்கப்படாமலும், வர்ணம் பூசப்படாமலும் இருந்தது. தற்போது இந்த நீரூற்றை சீரமைக்கும் பணிகளும், வர்ணம் பூசும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த நீரூற்று அருகே நின்று புகைப்படம் எடுத்துச் செல்ல ஏற்றதாக அமையும்….

The post ஆதாம் நீரூற்று சீரமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Adam's Fountain ,Ooty ,Adam fountain ,Adam ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...